நடக்குமா இந்தியா பாகிஸ்தான் மேட்ச்?? எச்சரிக்கை விடுத்த தீவிரவாத அமைப்பு - திணறும் ICC
நியூயார்க்கில் நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் வந்துள்ளது என தகவல் வெளியாகியிருக்கின்றது.
டி20 உலகக் கோப்பை
டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2 முதல் 29-ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. இதில் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.
இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதன் பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி ஜூன் 9 ந் தேதி நடைபெறுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி வழக்கம் போல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல்
ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டியை காண காத்திருக்கும் நிலையில், வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணி வீரர்களின் அதிகாரபூர்வ தொடருக்கான ஜெர்சி அண்மையில் BCCI'யால் அறிவிக்கப்பட்டது.
உலக கிரிக்கெட் ஆவலை தூண்டியுள்ள இப்போட்டிக்கு தற்போது ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு அமைப்பான கொராசான் என்ற தீவிரவாத குழு ‘Lone Wolf’ மிரட்டல் விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெறும் மைதானத்தைச் சுற்றி வழக்கமான பாதுகாப்பை விட கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் நகர காவல் துறை தெரிவித்துள்ளது.