மகளின் திருமணம்; பேங்க் லாக்கரில் சேர்த்த 18 லட்சம் - அரித்து தின்ற கரையான்!
வங்கி லாக்கரில் வைத்திருந்த 18 லட்சம் ரூபாயை கரையான் அரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.18 லட்சம்
உத்தரபிரதேசம், மொராதாபாத்தைச் சேர்ந்தவர் அல்கா பதக். இவர் தனது மகளின் திருமணத்திற்காக பணத்தை வங்கியில் பத்திரப்படுத்த முடிவு செய்துள்ளார்.
தொடர்ந்து, பாங்க் ஆப் பரோடாவின் ராமகங்கா விஹார் கிளை லாக்கரில், நகைகள் மற்றும் ரொக்கம் ரூ18 லட்சம் ஆகியவற்றை பத்திரப்படுத்தினார்.
கரையான் அரித்த பரிதாபம்
இந்நிலையில், வங்கி மேலாளரிடமிருந்து அல்கா பதக்குக்கு அழைப்பு வந்தது. லாக்கர் ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல் மற்றும் கேஒய்சி சரிபார்ப்பு நடைமுறைகளுக்காக வரவழைக்கப்பட்டார்.
அப்போது, லாக்கரை திறந்து பார்த்ததில் அவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். பத்திரப்படுத்திய 18 லட்சம் ரூபாய்க்கான கரன்சி தாள்களை கரையான்கள் அரித்திருந்தன.
உடனே, கரன்சி தொகை குறித்தும், அவற்றில் சேதத்தின் விளைவு குறித்தும், லாக்கரின் பாதுகாப்பின்மை குறித்தும் வங்கி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
[arumbakkam-bank-robbery-one-more-arrested-