கர்ப்பத்தை அறிவித்த பிரபல டென்னிஸ் வீரர் - 2024-ல் திரும்பிவிடுவதாக உறுதி!

Tennis Pregnancy Japan
By Sumathi 2 மாதங்கள் முன்
Report

டென்னிஸ் வீரர் நவோமி ஒசாகா தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 நவோமி ஒசாகா 

ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் டென்னிஸ் வீரர் நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நவோமி ஒசாகா. இவர் 2019-ம் ஆண்டு முதல், 25 வயதான ராப்பர் என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறார். இந்நிலையில், தனது ட்விட்டர் பதிவில் “கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் சுவாரஸ்யமாக சென்றது, மிகவும் சவாலான நேரங்கள் மிகவும் வேடிக்கையாகவே இருந்தன.

கர்ப்பத்தை அறிவித்த பிரபல டென்னிஸ் வீரர் - 2024-ல் திரும்பிவிடுவதாக உறுதி! | Tennis Star Naomi Osaka Announces Pregnancy

விளையாட்டில் இருந்து விலகிய இந்த சில மாதங்கள், என் வாழ்க்கையை நான் அர்ப்பணித்த விளையாட்டின் மீது எனக்கு ஒரு புதிய அன்பை கொடுத்துள்ளது. வாழ்க்கை மிகவும் குறுகியது என்பதை நான் உணர்கிறேன். நான் எந்த தருணத்தையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை, ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஆசீர்வாதத்துடன் கூடிய சாகசமாகும்.

கர்ப்பம்

எதிர்காலத்தில் நான் எதிர்நோக்குவதற்கு எவ்வளவோ இருக்கிறது என்று எனக்குத் தெரியும். நான் எதிர்நோக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், என் குழந்தை எனது ஆட்டங்களில் ஒன்றைப் பார்த்துவிட்டு, 'அது என் அம்மா' என்று யாரிடமாவது சொல்ல வேண்டும், ஹாஹா.

கர்ப்பத்தை அறிவித்த பிரபல டென்னிஸ் வீரர் - 2024-ல் திரும்பிவிடுவதாக உறுதி! | Tennis Star Naomi Osaka Announces Pregnancy

வாழ்க்கையைக் கடக்க சரியான பாதை இல்லை என்று நான் நினைக்கவில்லை. நல்ல நோக்கத்துடன் முன்னேறினால், இறுதியில் உங்கள் வழியைக் கண்டுபிடிப்பீர்கள் என்று உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், 2024 ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிக்குத் தான் திரும்பிவிடுவதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.