அந்த குத்துப்பாட்டுக்கு விஜய்யுடன் ஆடும்போது கர்ப்பமாக இருந்தேன் - மாளவிகா பளீச்!
விஜய்யுடன் குத்துப்பாட்டுக்கு நடனமாடும் போது கர்ப்பமாக இருந்ததாக நடிகை மாளவிகா தெரிவித்துள்ளார்.
மாளவிகா
நடிகை மாளவிகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினிகாந்த், கமலுடன் நடித்துள்ளார். இவர் ஆடிய வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் இன்னைக்கும் பலரது ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது.
அதன்பின், தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த மாளவிகா பொன் சரவணன் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகி உள்ள கோல்மால் படத்தில் நடித்துள்ளார்.
ரீ - எண்ட்ரி
அப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், என்னுடைய முதல் படமே அஜித்துடன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இப்போது வாய்ப்பு கிடைத்தால் அஜித்,விஜய்யுடன் சேர்த்து நடிப்பேன்.
விஜய்யுடன் குருவி படத்தில் வரும் 'டன்டன்னா டர்னா குருவியோட பாட்டு' பாடலின் போது நான் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தேன். மருத்துவர்கள் கண்டிப்பாக டான்ஸ் ஆடக்கூடாது என்ற கூறிவிட்டதால், நடன இயக்குநர் எனக்கு கஷ்டமே இல்லாத டான்ஸ் ஸ்டேப்பை கொடுத்தார்.
இல்லை என்றால் அந்த பாடலில் இன்னும் கடுமையான ஆட்டம் போட்டு இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.