சூரியனுக்கு களமிறக்குவதும் தமிழர்தான்; ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக தென்காசி பெண் - யார் இவர்?

ISRO
By Sumathi Sep 02, 2023 03:22 AM GMT
Report

‘ஆதித்யா எல்-1’ விண்கல திட்ட இயக்குனராக தென்காசி பெண் பணியாற்றுகிறார்.

‘ஆதித்யா எல்-1’ 

சூரியனை ஆய்வு செய்வதற்காக 'ஆதித்யா எல்-1' விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது.

சூரியனுக்கு களமிறக்குவதும் தமிழர்தான்; ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக தென்காசி பெண் - யார் இவர்? | Tenkasi Scientst Nigar Shaji Director Of Aditya L1

அதற்கான கவுண்டவுன் தொடங்கியது. இந்த விண்கலத்தின் திட்ட இயக்குனராக பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றுகிறார். செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பள்ளிக்கூடத்தில் பயின்ற இவர் பிளஸ்-2 தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார்.

நிகர் ஷாஜி

பின்னர் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து, மேல்படிப்பை பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் பயின்று, இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் சென்றுள்ளார்.

சூரியனுக்கு களமிறக்குவதும் தமிழர்தான்; ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக தென்காசி பெண் - யார் இவர்? | Tenkasi Scientst Nigar Shaji Director Of Aditya L1

இவரது கணவர் ஷாஜகான், துபாயில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார் . இவர்களின் மகன் முகம்மது தாரிக், நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாக உள்ளார். மகள், தஸ்நீம் பெங்களூரில் படித்து வருகிறார்.

ஆதித்யா எல்-1 விண்கலம் முழுக்க முழுக்க இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய கூட்டமைப்பை தொடர்ந்து சூரியனை ஆய்வு மேற்கொள்ளும் 4-வது நாடாக இந்தியா சாதனை புரியும்.