வரிசையில் வர சொன்ன வாக்காளர் - அறைந்த எம்.எல்.ஏ - திருப்பி அடித்த வாக்காளர்
இன்று நடைபெற்று வரும் ஆந்திர பிரதேச தேர்தலில் அடுத்தடுத்த திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆந்திர அரசியல்
மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2019-ஆம் ஆண்டு தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்.
மேலும் மக்களவையில் 17 இடங்களை அக்கட்சி கைப்பற்றியது. 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்தும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜன சேனா, பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணியும் போட்டி போடுகின்றன.
எம்.எல்.ஏ'க்கு அறை
காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், பல இடங்களில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. பூத் ஏஜெண்டுக்கள் மீது தாக்குதல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதம் என தொடர் செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
இந்த சூழலில் தான் மற்றுமொரு செய்தி வெளிவந்துள்ளது. தெனாலி ஒய்.எஸ்.ஆர் எம்எல்ஏ சிவகுமார் வாக்குச்சாவடியில் சாமானியர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகுமார் சாவடியில் லைனைப் புறக்கணிப்பதைக் கண்ட ஒருவர் அவரைத் தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. சாமானியரை அறைந்தார். கோபமடைந்த வாக்காளர் எம்எல்ஏவை மீண்டும் அறைந்தார், இதன் விளைவாக இருவரும் கோஷ்டி சண்டையில் ஏற்பட்டது.
Voter who objected to #Guntur District #TenaliMLA #Sivakumar jumping queue, was slapped by him & voter returned in kind; ugly show of political musclepower as the @ysrcp MLA candidate's henchmen joined attack on voter #BoothViolence #ElectionsWithNDTV #AndhraPradeshElections2024 pic.twitter.com/Z5wK0enrWK
— Uma Sudhir (@umasudhir) May 13, 2024