15 பூத் ஏஜென்ட் கடத்தல் - சரமாரி தாக்குதல் - ஆந்திர தேர்தல் வாக்குப்பதிவில் பரபரப்பு
ஆந்திர மாநிலத்தில் இன்று சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
ஆந்திர அரசியல்
மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2019-ஆம் ஆண்டு தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ். மேலும் மக்களவையில் 17 இடங்களை அக்கட்சி கைப்பற்றியது.
175 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்தும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜன சேனா, பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணியும் போட்டி போடுகின்றன.
மோதல்
இன்று காலை முதல் வாக்குப்பதிவுகள் துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. மாநிலத்தின் பல்நாடு மாவட்டத்தின் ரெண்டல என்ற கிராமத்தின் வாக்குச்சாவடியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
மோதல் போக்கு அதிகரித்து ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கி கொண்டுள்ளனர். இதில் இருவரின் மண்டை உடைந்து ரத்தம் வந்துள்ளது. மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் காரணமாக கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதே போல, சித்தூர் மாவட்டத்தின் புங்கனூர் என்ற பகுதியில் 15'க்கும் மேற்பட்ட தங்கள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெலுங்கு கட்சியினர் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து பல இடங்களிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.