10 ரூபாய்க்கு டி-ஷர்ட் : கடையில் முண்டியடித்துக் கொண்ட மக்கள்!
10 ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்கப்படுவதால் பொதுமக்கள் பலரும் முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.
மெகா ஆஃபர்
நாமக்கல், ராசிபுரம் கடைவீதி கன்னையா தெருவில் புதிதாக துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. இங்கு அறிமுக சலுகையாக 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு
இன்று ஒருநாள் மட்டும் இந்த சலுகை எனக் கூறப்படுகிறது. இதனால், அதிகாலை 5 மணி முதலே இளைஞர்கள் கடை முன்பு குவிந்தனர். கடை திறப்பதற்குள் நெரிசல் அதிகமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தள்ளுமுள்ளு
பலரும் 10 ரூபாய் கொடுத்து கைநிறைய டி-ஷர்ட் வாங்கி கொண்டு சென்றனர். இ
ந்நிலையில் போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.