கத்தியால் குத்தினாலும், கிழித்தாலும் உயிருக்கு ஆபத்து வராது - விரைவில் அறிமுகமாகும் சூப்பர் டி-ஷர்ட்
கத்தியால் குத்தி கிழித்தாலும், உயிர் தப்பித்து விடும் சூப்பரான டி-ஷர்டுகளை பிரபல நிறுவனம் தயாரித்து அசத்தி உள்ளது. இந்த டி-ஷர்டுக்களை இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் ஆயுத நிறுவனமான பி.பி.எஸ்.எஸ் ஒரு அருமையான டி-ஷர்ட்டை உருவாக்கி இருக்கிறது.
இந்த டி-ஷர்ட்டில் ரொம்ப கூர்மையான கத்தியால் எடுத்து தாக்கினாலும், குத்தினாலும், கிழித்தாலும் உயிருக்கு ஒன்றும் ஆகாது, உடலிலும் எந்த காயமும் ஏற்படாது. இந்த டி-ஷர்ட், முதன்மையாக உடல் பாதுகாப்பு கவசமாக அமைந்துள்ளது.
இந்த டி-ஷர்ட் கார்பன் பைபரிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த டி-ஷர்ட்டில் பருத்தி இழையை விட மிகவும் வலிமையானது. இதுபோன்ற கவசம் மற்றும் துப்பாக்கி நிறுவனங்கள் சாதாரண குடிமக்களுக்கு இதை அங்கிகரிப்பது கிடையாது.
விரைவில் இந்த டி-ஷர்ட் அறிமுகமாக இருக்கிறது. இதன் விலை ரூ.16,000 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட வீடியோ இதோ -
This Carbon Fiber Body Armor Could Save You From Street Attacks. https://t.co/pmznBpUCMn via @FacebookWatch
— Arumugam (@Arumuga77776718) December 22, 2021