தமிழகத்தில் உள்ள கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு
தமிழகத்தில் உள்ள கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது.
கோவில்களில் மாற்றுத்திறாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு
இந்த அறிவிப்பை செயல்படுத்த கோயில்களில் சாய்வு தளங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயிலில் உள்ள வசதிகள், கோயில் நுழைவு வாயில் அருகே குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலி இருப்பதை உறுதி செய்ய ஒரு தனி பணியாளர் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
சக்கர நாற்காலியில் மாற்றுத்திறாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் மரப்பலகையிலான சாய்வு தளங்கள் விரைவில் அமைக்க வேண்டும் என்று திருக்கோயில் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.