மாற்றுத்திறனாளி ரசிகையின் கண்ணீரை துடைத்துவிட்ட தோனி - நெகிழ்ச்சி பதிவு!
தோனி தனது ரசிகையை நேரில் சந்தித்து அவரின் கண்ணீரை துடைத்துவிட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது தீவிர ரசிகையான மாற்றுத்திறனாளி சிறுமியை சந்தித்துள்ளார்.
லாவண்யா பிலேனியா என்ற மாற்றுத்திறனாளி சிறுமி கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகை ஆவார். அவரை நேரில் சென்று சந்தித்த தோனி அருகில் இருந்த நாற்காலியில் சிறுமியின் அருகே அமர்ந்து உரையாடினார்.
இதனை கண்டு மகிழ்ச்சியடைந்த சிறுமி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். அவரை அழ வேண்டாம் என கேட்டுக்கொண்ட தோனி சிறுமியின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டார்.
இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து குறிப்பிட்டுள்ள சிறுமி, தோனியை சந்த்தித்த உணர்வை வார்த்தையால் விவரித்திட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
Such a great person - MS Dhoni, always finding time for fans. (Video credit: Lavanya Pilania Instagram) pic.twitter.com/LAHesSAzkt
— Johns. (@CricCrazyJohns) May 31, 2022
மேலும், தோனி தனது பெயரின் ஆங்கில எழுத்துக்களை கேட்டதாகவும் பின்னர் தன்னோடு கைக் குலுக்கிக்கொண்டதாகவும், மகிழ்ச்சியில் தான் அழுததைக் கண்டு அழவேண்டாம் என கூறி கண்ணீரை துடைத்துவிட்டதாகவும் அதுவே தன் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்றும் சிறுமி தெரிவித்துள்ளார்.