ஒரு அரசியல் தலைவர் மரணமடைவார் - பரபரப்பை கிளப்பிய சாமியாரின் அருள்வாக்கு!!
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் பூஜை கொண்டாட்டங்கள் களைகட்டும்.
ஆடி மாதம்
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். தமிழகத்தின் கொண்டாட்ட மாதமாகவே இது அமைகிறது. அம்மன் கோவில்களில் பொங்கல் வைத்து வழிபட்டு மகிழ்வார்கள் மக்கள். அம்மன் கோவில்களில் மட்டுமின்றி ஊர் காவல் தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படும்.
அதே நேரத்தில், பல நேர்த்திக்கடன்களும் இந்த நேரங்களில் கொடுக்கப்படும். சாமியார்கள் சாமியாடி குறிசொல்வதும் நடைபெறும். அப்படி சாமியார் சொல்லும் அருள்வாக்குகள் சில உண்மையாகி போவதும் வழக்கமே. அப்படி கோவில் ஒன்றில் சாமியார் சொன்ன அருள்வாக்கு ஒன்று மக்களை அதிரவைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மீமிசல் குடியிருப்பு பகுதியில் வழிவிடும் கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. ஆடி பௌர்ணமி திருவிழா அண்மையில் இக்கோவிலில் நடைபெற்றுள்ளது.
உயிர் இழப்பு...
கோயில் பூசாரி மாதவன் அரிவாள்கள் மீது ஏறி நின்று சாமி ஆடி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்படி அருள்வாக்கு சொல்லும் போது, முதலில் நாட்டை பற்றி அருள்வாக்கு கூறப்படுவது வழக்கம். அவர் சொன்ன விஷயங்களிலேயே பெரிய கவனத்தை பெற்றது ஒன்றே ஒன்று தான்.
அதாவது இந்த ஆண்டு அரசிய தலைவர் ஒருவரின் உயிர் சேதம் ஏற்படும் என கூறினார். அதே நேரத்தில், விளைச்சல் அதிகரிக்கும், தங்கம் விலை குறையும், அரசு வேலைகள் அதிகமாக கிடைக்கும் போன்றவற்றையும் அவர் கூறினார்.