மிதமான மழைக்கு வாய்ப்பு.. வெப்பம் சற்று குறையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil nadu TN Weather Puducherry Weather
By Jiyath Apr 11, 2024 07:34 AM GMT
Report

கோடை வெயிலின் தாக்கம் சற்று குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மிதமான மழை

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் "தென் மாநிலங்களின் மேல், வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், மாநிலத்தின் சில மாவட்டங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு.. வெப்பம் சற்று குறையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்! | Temperature Drop Slightly Meteorological Centre

தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதையொட்டிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும், இன்று முதல் 15ம் தேதி வரையிலும், மிதமான மழை பெய்யக்கூடும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கொளுத்தும் கோடை வெயில்; மன்சூர் வீட்டில் மட்டும் தினமும் மழை - அதெப்படி..?

கொளுத்தும் கோடை வெயில்; மன்சூர் வீட்டில் மட்டும் தினமும் மழை - அதெப்படி..?

குறைய வாய்ப்பு

மேலும், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலையானது, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு.. வெப்பம் சற்று குறையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்! | Temperature Drop Slightly Meteorological Centre

உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை, 40 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 35 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.