மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ; பெண்களை அடிப்பார் - பகீர் தெரிவித்த பிரபலம்!
இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்து டெலிபோன் ராஜ் பேட்டி அளித்துள்ளார்.
மாரி செல்வராஜ்
பிரபல நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ் மாமன்னன் பட இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்கள் இன்று சாதியை உயர்த்தி படம் எடுக்கிறார்கள். எங்களை அடிப்பதாகவும்,
இழிவு படுத்துவதாகவும் கூறி இன்றைய இளைஞர்கள் மத்தியில் சாதி வெறியை தூண்டி வருகின்றனர். இவர்களது படம் வெளியானால், பலரும் அதை ரசிகர்களாக பார்க்காமல் சாதி வெறியர்களாகவே பார்ப்பார்கள். மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ, இதை உதயநிதியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
ஒரு சைக்கோ...
அவன் ஒரு சைக்கோ சார்.. எல்லாரையும் அடிப்பான்..' என்று பல நடிகர்களை செட்டில் அடித்து விடுகிறார். இப்படி ஒருவரை அடிக்க முடியுமா? கர்ணன் படத்தில் போலீஸ் அடிக்கும் காட்சியில் நிஜமாகவே ஒரு நடிகை அப்படி அடிக்கப்பட்டு இருகிறார். அப்போது தான் அது உண்மையாகத் தோன்றும் என்கிறார்.
இது குறித்து அந்த பெண் எனது போனில் பேசிய ஆடியோ என்னிடம் உள்ளது. சொந்த ஊரிலேயே படப்பிடிப்பு நடத்துவார். தன் சாதிக்காரர்களை மட்டும் டயலாக் பேச வைப்பது எப்படி நியாயமாகும்? படங்களை உருவாக்கி மகிழுங்கள். ஏன் இப்படி ஒருவரை அடிக்கிறாய்? சாதி வெறியைத் தூண்டும் படங்களை எடுக்கக் கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.
இப்படிப்பட்ட படங்களை எடுக்க இயக்குநர் சங்கம் அனுமதிக்கக் கூடாது, இப்படிச் செய்தால் தமிழ் சினிமா வளர்ச்சி அடையாது” என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.