சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜ் - ரஜினிகாந்த் பாராட்டு !
மாமன்னன் திரைப்படத்தை பார்த்ததுவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என பலர் நடிப்பில் கடந்த 29 ஆம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது மாமன்னன் திரைப்படம்.
ஒடுக்கப்பட்டோரின் அரசியலை பேசும் படம் என்று ரசிகர்கள், திரை பிரபலங்கள், சக இயக்குனர்கள், என அனைவரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
ரஜினிகாந்த பாராட்டு
நல்ல திரைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம் அதன் இயக்குனர்கள் நடிகர்களை வீட்டிற்கே அழைத்து பாராட்டுவதை வழக்கமாக செய்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "இந்த படம் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு, அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.