வீடியோ காலில் வந்த நிர்வாண பெண்.. நள்ளிரவில் எம்எல்ஏ செய்த காரியம்!

Cyber Attack Telangana Crime
By Vidhya Senthil Oct 20, 2024 12:30 PM GMT
Report

எம்எல்ஏ ஒருவருக்கு நள்ளிரவில் மர்ப நபர் நிர்வாண வீடியோ கால் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவருக்குக் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி நள்ளிரவு தெரியாத எண்ணில் இருந்து வீடியோ கால் வந்துள்ளது.அந்த வீடியோ காலை அட்டன் செய்த போது எதிர் முனையில், ஒரு பெண் நிர்வாணமாகத் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

nudity video call

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏ, வீடியோ காலை உடனடியாக துண்டித்துள்ளார். மேலும் இந்த கால், தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்ட சதியா அல்லது தற்செயலாக நடந்ததா எனச் சந்தேகம் அடைந்துள்ளார்.

காரில் விழுந்த லேசான கீறல்..பெற்றோரின் கண்முன்னே மகனை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்!

காரில் விழுந்த லேசான கீறல்..பெற்றோரின் கண்முன்னே மகனை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்!

இந்த சம்பவம் குறித்து எம்எல்ஏ, காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேசிய சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டலில் (National Cybercrime Reporting Portal)எழுத்துப்பூர்வமான தனது புகாரைச் செய்துள்ளார்.

 நிர்வாண வீடியோ 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தெலங்கானா சைபர் கிரைம் செக்யூரிட்டி பீரோ தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீடியோ கால் வந்த எண் யாருடையது?, இதற்குப் பின்னால் உள்ளவர்கள் யார்?

வீடியோ காலில் வந்த நிர்வாண பெண்.. நள்ளிரவில் எம்எல்ஏ செய்த காரியம்! | Telengana Mla Got Nudity Video Call In Midnight

இதன் பின்னால் தீங்கிழைக்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா? பணம் பறிக்கும் செயலா என உள்ளிட்ட கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் எம்எல்ஏ-வுக்கு நிர்வாண வீடியோ கால் செய்த சம்பவம் அரசியல் கட்சி தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.