இன்ஸ்டாகிராம் நட்பால் வந்த வினை - 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்
8 ஆம் வகுப்புக்கு மாணவியை இன்ஸ்டாகிராம் நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி அங்குள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

தந்தையை இழந்த இவர் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். படிப்பில் படு சுட்டியான இவர், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடுவது, சேட் செய்வது என ஆக்டிவாக இருந்துள்ளார்.
கூட்டு பாலியல் வன்கொடுமை
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முரளி (23), ஜானகிராமன் என்பவரது மகன்கள் தனசேகர் (20), திருநாவுக்கரசு (21) மற்றும் பிரகலாதன் (21) ஆகிய 4 பேரிடமும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததாக கூறப்படுகின்றது.

இன்ஸ்டாகிராமில் பழகியதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இவர்கள், ஆசை வார்த்தை கூறி சிறுமியை தனியாக அழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது குறித்து சிறுமி கூறிய தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 இளைஞர்களையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan