15 ஆண்டுகள் விந்தணு தானம்..டெலிகிராம் CEO பாவெல் துரோலின் அதிரவைக்கும் மறுபக்கம்!
திருமணமாக நிலையிலும் 100 குழந்தைகளுக்குத் தந்தையாகி உள்ளார் டெலிகிராம் CEO இது குறித்து சுவாரஸ்யத் தகவலை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
டெலிகிராம் CEO
உலகின் பல்வேறு மக்களின் தகவல் பரிமாற்றத்திற்கு டெலிகிராம் முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்ஸ்அப் செயலிக்குப் போட்டியாக டெலிகிராம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் டெலிகிராம் செயலி தீவிரவாதத்துக்கு உதவுவதாகவும், பல்வேறு சட்டவிரோதச் செயல்களுக்குத் துணை போவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி அசர்பைஜானிலிருந்து பாரிஸ் விமான நிலையம் வந்த டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவத்திற்கு எலான் மஸ்க் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இப்படிப்பட்ட சூழலில் டெலிகிராம் CEO இது குறித்து சுவாரஸ்யத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் பாவெல் துரோலின் நண்பர் ஒருவர் அவரை அணுகி, விந்தணு தானம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இப்படிச் செய்வதன் மூலம் நண்பருக்குக் குழந்தை கிடைக்கும் எனக் குடும்பத்தினர் வலியுறுத்தவே,
விந்தணு தானம்
மிகுந்த தயக்கத்துடன் பாவெவ் துரோவ் விந்தணு தானம் செய்ய ஒத்துக்கொண்டார்.அப்போது பாவெவ் துரோவ்வின் விந்தணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் விந்தணுக்களின் எண்ணிக்கை, இயக்கம் மற்றும் அளவு ஆகியவை அதிக அளவில் உள்ளது.
இதன் மூலம் மலட்டுத் தன்மை பிரச்சனையால் அவதிப்படும் தம்பதிகளுக்குத் தங்களுடைய விந்தணு தானம் பெற்றோர் ஆகும் வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 15 ஆண்டுகளில், பாவெல் துரோல் விந்தணு தானம் மூலம் உலகம் முழுக்க 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் செயற்கை கருத்தரித்தல் மூலம் பிறந்துள்ளனர் என்ற தகவல் அவருக்குச் சொல்லப்பட்டது. அதாவது 100க்கு மேற்பட்டகுழந்தைகளுக்கு பாவெல் துரோவ் தந்தையாகி உள்ளார்.