வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த டெலிவரி பாய்!
வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் டெலிவரி பாய் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா
தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள மஞ்சுளாபூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் அவ்வப்போது ஆன்லைனில் சில பொருட்களை ஆர்டர் செய்து பெறுவது வழக்கமாம்.
அந்த வகையில் கடந்த வாரம் ஒரு பொருளை ஆர்டர் செய்துள்ளார். நேற்று முன்தினம் டெலிவரி பாய் ஆர்டர் செய்த பொருளை கொடுத்துள்ளார். அப்போது வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருப்பதைப் பார்த்த வாலிபர்,
திடீரென வீட்டுக்குள் நுழைந்து கதவைத் தாழ்ப்பாள் போட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
பாலியல் வன்கொடுமை
அப்போது வாலிபர் கதவைத் திறந்துகொண்டு பைக்கில் ஏறித் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து இளம்பெண் மஞ்சுளாபூர் ஊரக காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதனிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டுத் தப்பி ஓடிய டெலிவரி பாய் விக்னேஷ்(23) என தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறை பின்னர் நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.