போலீஸாரை ஓங்கி கன்னத்தில் அறைந்த முதலமைச்சரின் தங்கை - பரபரப்பு

Andhra Pradesh
By Sumathi Apr 25, 2023 04:12 AM GMT
Report

பெண் போலீசாருடன் கைகலப்பு ஏற்பட்டு முதலமைச்சர் ஜெகன்மோகனின் தங்கை கைதாகியுள்ளார்.

ஒய்.எஸ்.ஷர்மிளா

ஆந்திரா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்று வருகிறது. அவரது சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை (ஒய்எஸ்ஆர்டிபி) தொடங்கினார்.

போலீஸாரை ஓங்கி கன்னத்தில் அறைந்த முதலமைச்சரின் தங்கை - பரபரப்பு | Telangana Politician Ys Sharmila Slaps Cop

அம்மாநில அரசுக்கு எதிராக நடைபயணம், போராட்டம் என பல விஷயங்களை செய்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாள் லீக் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நேரில் வந்துள்ளார்.

கைது

அப்போது ஷர்மிளாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதில் கோபமடைந்த அவர், போலீசாரை மீறி சென்ற பொழுது பெண் போலீசார் தடுக்கையில், அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பும் ஆனது. அதில் ஒரு பெண் போலீசாரை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, கைது செய்யப்பட்ட ஷர்மிளாவை அவரது தாயார் விஜயம்மா பார்க்க சென்றார். அப்பொழுது போலீசார் பார்க்க விடாமல் தடுத்தனர். அதனால் ஆத்திரத்தில் அவர் பெண் போலீசார் ஒருவரின் கைகளை முறித்து தள்ளிவிட்டார். தாயும் மகளும் போலீசை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.