திடீரென ஆற்றில் கவிழ்ந்த படகு - நூலிழையில் உயிர் தப்பிய அமைச்சர்!

Telangana
By Vinothini Jun 10, 2023 09:40 AM GMT
Report

 தெலுங்கானா அமைச்சர் சென்ற படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுவிழா

தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதனால் ஐதராபாத் அருகே உள்ள கரீம் நகரில் உள்ள ஆசிஃப் நகரில் தெலுங்கானா மாநில ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

திடீரென ஆற்றில் கவிழ்ந்த படகு - நூலிழையில் உயிர் தப்பிய அமைச்சர்! | Telangana Minister Slipped Into The River

அந்த பகுதிக்கு ஆற்றில் தான் படகில் செல்ல வேண்டும், அதில் கலந்து கொள்வதற்காக அந்த மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காங்குலா கமலாகர் சென்றுள்ளார்.

கவிழ்ந்த படகு

இந்நிலையில், அங்கு செல்வதற்காக படகில் தான் செல்லவேண்டும், அதனால் அமைச்சர் படகில் ஏறினார். உடனே படகு கவிழ்ந்தது, இதில் நிலை தடுமாறி அமைச்சர் ஆற்றில் கவிழ்ந்தார்.

இதனை கண்ட போலீசார் மற்றும் அங்கிருந்த அரசியல்வாதிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உடனடியாக போலீசார் ஆற்றில் இறங்கி அமைச்சரை லாவகமாக காப்பாற்றினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.