நான்தான் விஷ்ணு; 2 மனைவிகள், பாம்பு படுக்கை - ஊரை ஏமாற்றிய பலே சாமியார்!
நான்தான் விஷ்ணு அவதாரம் என போலி சாமியார் ஒருவர் உலா வந்துக்கொண்டிருந்தார்.
விஷ்ணு அவதாரம்
திருவண்ணமலை, செஞ்சியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவருக்கு 2 மனைவிகளும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் 1 வருடத்திற்கு முன் தெலங்கானா, சுகுரு கிராமத்திற்கு சென்று கோயிலில் அர்ச்சகராக வேலை செய்து வந்தார்.

முன்னதாக, நான்தான் கடவுள்.. நான்தான் விஷ்ணுவின் மறு அவதாரம் என வலம் வந்த சந்தோஷின் எண்ணம் வேலைக்காகததால் தனது இருப்பிடத்தை தெலங்கானாவிற்கு மாற்றிக் கொண்டார்.]
சிக்கிய சாமியார்
அங்கும், மக்களை காக்க வந்த மகாவிஷ்ணு.. மனித உருவில் வந்த கடவுள்.. தனது மனைவிகளே ஸ்ரீதேவி, பூதேவி என என தன்னை சந்திக்க வருபவர்களிடம் அதே டயலாக்கை சொல்லி வந்துள்ளார். எதிர்காலத்தில் ஐந்து தலை பாம்பு தனது படுக்கையாக இருக்கும் எனவும் கூறிவந்துள்ளார்.
தற்போது, ஐந்து தலைகளைக் கொண்ட பாம்பு போன்று கட்டில் அமைத்து அதில் படுத்து கொண்டு, பக்தர்களுக்கு தரிசனம் தந்துள்ளார். மேலும் தனது 2 மனைவிகளும் கால் அழுத்தி விட தொடர்பான ஃபோட்டோக்களும் பரவி வைரலானது.
இதில், கிராமத் தலைவர் சத்யநாராயணா தனது விவசாய நிலத்தில் உள்ள ஒரு வீட்டை தானமாக கொடுத்துள்ளார்.இதனால், சந்தோஷ் சுவாமியை சந்திக்க ஏராளமான பக்தர்கள் வரிசைகட்டி நின்றனர். அதனால், அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அறிந்த போலீஸார் சந்தோஷ் சுவாமியை அங்கிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.