உன் பணமும் வேண்டாம்.. பாஸ்போர்ட்டும் வேண்டாம் : நித்யானந்தாவின் லேட்டஸ்ட் வீடியோ
கைலாசா அதிபரும், பிரபல சாமியாருமான நித்யானந்தா புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பிரபலமான நித்தியானந்தா கைலாசா என்ற இந்துக்களுக்கான தனி நாட்டை உருவாக்கியிருப்பதாகவும், அதில் உள்நாட்டு பாதுகாப்பு, உள்துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி, சுகாதாரத் துறை, கல்வித் துறை என பல்வேறு அரசு துறைகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் கைலாசாவுக்கென தனி கரன்சிகளை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கைலாசாவில் குடியேறிய நித்தியானந்தா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் உன் துட்ட போட்டு நான் பணக்காரணா ஆகப்போறதும் இல்ல.. நீ ஓட்டுப்போட்டு நான் அதிபரா ஆகப்போறதும் இல்ல.. நானே என்ன அதிபர் -னு சொல்லிக்கிட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அரசு அவரது பாஸ்போர்ட்டை திரும்பப் பெற்றதாகவும் தனக்கான நாட்டின் பாஸ்போர்ட்டை தற்போது சில நாடுகள் அங்கீகரித்திருப்பதாகவும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார். தான் இப்போது நினைத்தால் கூட பில்லியன் டாலர்கள் புழங்கும் நிறுவனத்தில் ஆலோசகராக பணியில் சேரமுடியும். ஆனால் இதனை சேவை நோக்கத்துடன் மக்களுக்கு இலவசமாக வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.