மயோனைஸ் விற்பனைக்குத் அதிரடி தடை?அரசு எடுத்த அதிரடி முடிவு!
ஐதராபாத்தில் மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மயோனைஸ்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பொருளாக மயோனைஸ் எனப்படும் சாஸ் வகை உள்ளது. இது தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்திருக்கிறது.இப்படி பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ்.
மோமோஸ், ஷவர்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் போன்ற உணவுப் பொருட்களில் இந்த மயோனைஸ் வைத்துச் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.இந்த சுழலில் மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதித்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த ரேஷ்மா பேகம் (வயது 31) என்ற பெண்ணும் அவரது குழந்தைகளும் கடந்த சில தினங்களுக்குச் சாலையோர கடையில் மயோனைனுடன் மோமோஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.இதனால் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தடை
ஆனால் ரேஷ்மா பேகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஐதராபாத்தில் கடந்த வாரம் இந்த கடையில் மோமோஸ் சாப்பிட்ட 15க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், இந்த விவகாரத்தில் தெலங்கானா அரசு, மாநிலத்தில் மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.