மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு - விசாரணையில் வெளியான பகீர் சம்பவம்!
ஐதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்டு பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோமோஸ்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் 31 வயதானவர் ரேஷ்மா பேகம். கடந்த சில மாதங்களுக்கு முன் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பீகாரைச் சேர்ந்த சிலர் டெல்லி மோமோஸ் என்ற பெயரில் சாலையோர கடை நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ரேஷ்மா பேகம் மற்றும் அவரின் குழந்தைகள் அந்த கடை மோமோஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனால் ரேஷ்மா பேகத்திற்கும் அவரது குழந்தைகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீதிபதியுடன் வழக்கறிஞர் வாக்குவாதம்.. காவல்துறை எடுத்த முடிவு -நீதிமன்றத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ஆனால் சிகிச்சை பலனின்றி ரேஷ்மா பேகம் திங்கட்கிழமை உயிரிழந்தார்.தொடர்ந்து குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து குறிப்பிட்ட அந்த கடை குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
உயிரிழப்பு
காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் கடைக்கு உரிமமும் அளிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. சாலையோர உணவுகளைச் சாப்பிடும்போது கவனம் தேவை என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக கடந்த வாரம் இந்த கடையில் மோமோஸ் சாப்பிட்ட 15க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையான கூறியதால் ரவிராஜை கொன்ற சம்பத் மனம்பேரி! மீண்டும் விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு IBC Tamil
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan