ஓங்கும் காங்கிரஸ் கை....பாஜகவிற்கு ஷாக் கொடுக்கும் தேர்தல் கருத்துக்கணிப்பு..!!

Indian National Congress Rahul Gandhi BJP Narendra Modi Telangana
By Karthick Oct 06, 2023 05:24 AM GMT
Report

அடுத்த ஆண்டின் மத்தியில் நாடாளுமன்ற தேர்தலும், இந்த ஆண்டின் இறுதியில் 5 மாநில தேர்தல்களும் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்தான கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

5 மாநில தேர்தல்

இந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் சத்திஸ்கர் ஆகிய மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் ஆட்சியில் உள்ளன. மத்திய பிரதேசத்தில் பாஜகவும், மிசோரத்தில் பாஜகவின் NDA கூட்டணியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சியில் உள்ளது.

இப்படியெல்லாம் ஒரு பிரதமர் பேசலாமா.? வன்மையாகக் கண்டிக்கிறேன் - முக ஸ்டாலின்!!

இப்படியெல்லாம் ஒரு பிரதமர் பேசலாமா.? வன்மையாகக் கண்டிக்கிறேன் - முக ஸ்டாலின்!!

தெலுங்கானா நிலவரம்

வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜகவிற்கு எவ்வளவு முக்கியமோ அதே போல தான் இந்த 5 மாநில தேர்தலும். மத்திய தேர்தலுக்கு முன் தங்களது பலத்தை நிரூபித்து காட்டும் முனைப்பில் பாஜக இருக்கிறது. இதை தென்னிந்தியாவில் நடைபெறும் ஒரே தேர்தல் தெலுங்கானா மாநிலம் தான். இங்கு பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி அசுர பலத்துடன் இருந்து வருகின்றது.அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 119 இடங்களில் 99 இடங்களை பிடித்து தனி பெரும் கட்சியாக அக்கட்சி நீடித்து வருகின்றது.

telangana-election-poll-favours-both-bjp-and-inc

ஆனால் இம்முறை நடைபெற போகும் தேர்தலில் அக்கட்சி ஆட்சியை இழக்கும் என கருத்துக்கணிப்புகள் உள்ளன. ஜன்மத் என்ற அமைப்பு நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளில் மொத்தமுள்ள 119 இடங்கள் ஆட்சியமைக்க தேவைப்படும் 60 இடங்களை எளிதாக காங்கிரஸ் கைப்பற்றும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.காங்கிரஸ் கட்சிக்கு 58-60 இடங்களையும், ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு 43-45 இடங்களும் பாஜக 8-9 இடங்களும், ஓவைசியின் மஜ்லீஸ் கட்சி 6-7 இடங்களும் கைப்பற்றும் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

கை ஓங்குமா..?

ஆனால் அதே நேரத்தில் மத்திய தேர்தலில் அம்மாநிலத்தில் பாஜகவின் கையே ஓங்கும் என கூறப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்தில் 17 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2019 ஆம் ஆண்டு பிஆர்எஸ் கட்சி 9 இடங்களையும், பாஜக தலைமையிலான NDA கூட்டணி 4 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 1 இடத்தையும் கைப்பற்றியது.

telangana-election-poll-favours-both-bjp-and-inc

தற்போது வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு "இண்டியா டிவி" - சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், மொத்தமுள்ள 17 இடங்களில் ஆளும் பிஆர்எஸ் கட்சி 8 இடங்களையும் பாஜக 6 இடங்க ளையும் காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில்தான் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 1 லோக்சபா தொகுதியில் வெல்லலாம் என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.