பாஜகவை ஆதரித்தால் தாலிபான் நிலை தான் - எச்சரித்த முதலமைச்சர்!

BJP Taliban
By Sumathi Jan 13, 2023 04:07 AM GMT
Report

பாஜகவை ஆதரித்தால் தாலிபான் நிலை ஏற்படும் என தெலங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.

 தாலிபான் கதை தான்

தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மஹபூபாபாத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன்பின் பேசிய அவர், ‘‘சமுதாயம் பெரும் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் அனைவரின் நலனுக்காகவும் விரும்புவது முக்கியம்.

பாஜகவை ஆதரித்தால் தாலிபான் நிலை தான் - எச்சரித்த முதலமைச்சர்! | Telangana Chief Minister Has Said Against Bjp

மத, ஜாதி வெறியை வளர்த்தால், மக்களைப் பிளவுபடுத்தி, பின்பற்றும் கொள்கைகள், நரகம் போல, ஆப்கானிஸ்தானைப் போல, தாலிபான் விவகாரம் போல, பயங்கரமான நிலைக்கு இட்டுச் செல்லும். இந்த வெறுப்பின் காரணமாக,

எச்சரிக்கை

நாட்டின் உயிர்நாடியே எரிந்து விழும் சூழல் உருவாகும். எனவே, குறிப்பாக இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மத்தியில் முற்போக்கு சிந்தனையும், பாரபட்சமும் இல்லாத அரசு அமைந்தால் மட்டுமே நாடும்,

மாநிலமும் முன்னேற்றம் அடைய முடியும். எதிர்கால அரசியலில் நாடு முழுவதும் முன்னேறும் வழியை தெலங்கானா காட்டுவதை விரும்புகிறேன் எனக் கூறினார்.