அரசை இப்படி விமர்சித்தால் கடும் தண்டனை - தாலிபான் அரசு எச்சரிக்கை..!
இனி அரசை யாராவது செய்கை செய்து விமர்சித்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு தாலிபான்கள் அரசு எச்சரித்துள்ளது.
தாலிபான்கள் வசமான ஆப்கானிஸ்தான்
கடந்து ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானின் நிர்வாகத்தை, தாலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி விமானத்தில் தப்பிச் சென்று விட்டார்.
இதனால், அச்சமடைந்த ஆப்கானிஸ்தானியர்களோ போக இடமில்லாமலும், நரகத்துக்குள் நுழைவதற்கு மனம் இல்லாமல் வாழ தயாரானார்கள்.
பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடு
அன்றிலிருந்து இன்று வரை அங்குள்ள பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆண் துணையில்லாமல் பெண்கள் வெளியே செல்ல தடை, பள்ளிக்கு செல்ல தடை என தாலிபான் ஆட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
தாலிபான்கள் பெண்களை கட்டாய திருமணம் செய்து அடிமையாக்கும் முயற்சி துவங்கி இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
சமீபத்தில் கூட, வீட்டுக்கு வெளியே செல்லும்போதும், பொது இடங்களில் பெண்கள் முகத்தை துணியால் மறைக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்ப ஆண்கள் கைது செய்யப்படுவர்; அவர்கள் அரசுப் பணியிலிருந்து நீக்கப்படுவர் என ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்திருந்தது.

தாலிபான் அரசு எச்சரிக்கை
இந்நிலையில், தற்போது, தாலிபான் அரசு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இனி யாராவது செய்கை மூலமாகவோ அல்லது வாய்மொழியிலோ அரசை விமர்சித்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது.