புது பட்டுப்புடவையிலேயே மண்டபத்தில் தூக்கில் தொங்கிய மணமகள் - நடந்தது என்ன!
மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
தெலுங்கானா, நவிபேட் நகரை சேர்ந்தவர் ரவளி. எம் சி ஏ படித்துள்ளார். இவருக்கும் மென் பொறியாளராக பணியாற்றும் சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில்,

ரவளி சந்தோஷ் உடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. அதன்பின் அதிகாலை திருமண மண்டபத்தில் உள்ள அறை ஒன்றுக்கு சென்ற ரவளி திருமணத்திற்கு வாங்கிய பட்டுப்புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
இந்நிலையில் அவரை தேடிய உறவினர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே புகாரின் பேரில் வந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனையடுத்த விசாரணையில், தொலைபேசியில் பேசும் போது திருமணத்திற்கு பின் நீ வேலைக்கு போக வேண்டும், உங்கள் குடும்ப சொத்தில் உனக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று சந்தோஷ் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணப்பெண் தற்கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.