முடி கொட்டியதால் பெண் கிடைக்கவில்லை : இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
தலை முடி கொட்டியதால் மணப்பெண் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தூக்கிடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
கேரள மாநிலம் , கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிரசாந்த் இவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகின்றார்.இவருக்கு தலையில் முடிகொட்டும் பிரச்சினை இருந்துள்ளது, இதற்காக பல மருத்துவர்களை , சந்தித்து சிகிச்சை எடுத்துள்ளார்.
தொடர்ந்து முடி உதிர்வு
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு கண் புருவத்தில் இருக்கும் முடிகள் உதிர்ந்த காரணத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணாமாக அவரது திருமணத்துக்கு பெண் பார்க்கும் திட்டம் தள்ளி போனது.
ஆகவே கடும் மன உளைச்சலில் இருந்த பிரசாந்த் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் தனது தற்கொலை முடிவுக்கு காரணம் தனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார், ஆகவே இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.