இளம் வாலிபரை துண்டு துண்டாக வெட்டி வீசிய காதலர்கள் - கொடூர சம்பவம்!
கேரளாவில் ஒரு வாலிபரை காதல் ஜோடிகள் துண்டு துண்டாக வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
கேரளா மாநிலம், மலப்புரம் அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் சூட்கேஸ் கிடந்துள்ளது.
அது திரூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் ஒரு வாலிபரை துண்டு துண்டாக வெட்டி வனப்பகுதிக்குள் வீசி சென்றது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இளம் காதல் ஜோடிகள் இவ்வாறு கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்துள்ளது.
கைது
இந்நிலையில், கதிஜாதுல் பர்கனா 18 வயதான இளம் பெண்ணுடன் காதலன் 22 வயதான முகமது சிபில் என்பவர் சேர்ந்து கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இந்த இருவரையும் போலீசார் தேடி வந்தனர், பின்னர் இருவரையும் குற்றவாளி என அறிவித்தனர்.
தொடர்ந்து, சென்னை ரயில்வே பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து எழும்பூர் ரயில்வே போலீசார், டாடாநகர் செல்ல இருந்த ரயிலில் கண்காணித்த போது இருவரும் பிடிபட்டனர். மேலும், எழும்பூர் போலீசார் அவர்களை கைது செய்து கேரளா போலீசிடம் ஒப்படைத்தனர்.