உடன் பிறந்த அண்ணனே.. தங்கையை மிரட்டி கர்ப்பமாக்கிய கொடூரம்!

Tamil nadu Pregnancy Sexual harassment POCSO
By Sumathi 2 வாரங்கள் முன்

தங்கையை, அண்ணன் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

வேலூர் ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது

உடன் பிறந்த அண்ணனே.. தங்கையை மிரட்டி கர்ப்பமாக்கிய கொடூரம்! | Teenager Who Threatened Her And Made Pregnant

அந்த மாணவியை அவளது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதிர்ச்சி சம்பவம்

இதனால் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து மாணவியை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

உடன் பிறந்த அண்ணனே.. தங்கையை மிரட்டி கர்ப்பமாக்கிய கொடூரம்! | Teenager Who Threatened Her And Made Pregnant

 இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து மருத்துவமனை சார்பில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாணவியின் தாயார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.