மீண்டும் மஞ்சும்மல் பாய்ஸ்..பள்ளத்தில் விழுந்த வாலிபர்;பதறிய நண்பர்கள்! மீட்கப் பட்டாரா?
கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் பகுதியில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுந்த வாலிபர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதியில் டால்பின் நோஸ் என்னும் சுற்றுலாப் பகுதி அமைந்துள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக அதிகமாக சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த ஒரு நண்பர்கள் படை அங்கு சென்றுள்ளது. அந்த டால்பின் மூக்கு போல நீண்டிருக்கும் ஆபத்தான பாறையின் விளிம்பில் நின்று அந்த இளைஞர் கூட்டத்தில் தன்ராஜ் என்ற ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார்.
மீட்க பட்டாரா?
அப்போது, சற்றும் எதிர் பாரதா விதமாக அந்த நபர் சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்தார். இந்த தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சுமார் 3 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, அவரின் நண்பர்களின் உதவியுடன் தன்ராஜை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.