17 வயது சிறுமியை 1 லட்சத்திற்கு வாங்கி திருமணம் செய்த முதியவர்!

POCSO Child Abuse Crime Mumbai
By Sumathi Jan 23, 2023 08:38 AM GMT
Report

17 வயது மாணவியை பணத்திற்கு வாங்கி முதியவர் திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிறுமி கடத்தல்

மும்பை, விக்ரோலி பார்க்சைட் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி கல்லூரிக்குச் சென்று வீடு திரும்பவில்லை என தாய் போலீஸில் புகாரளித்துள்ளார். அப்போது, மாணவியின் மொபைல் போன் சிக்னலின் மூலம் அவர் கடைசியாக தாதர் ரயில் நிலையத்தில் நின்றது தெரியவந்தது.

17 வயது சிறுமியை 1 லட்சத்திற்கு வாங்கி திருமணம் செய்த முதியவர்! | Teenage Girl Sold For Marriage 1 Lakh

அதில் கேமராப் பதிவை ஆய்வு செய்தபோது அந்த மாணவி ஒரு தம்பதியுடன் ஹூப்ளிக்குச் செல்லும் ரயிலில் ஏறிச் சென்றுள்ளார். மாணவியுடன் இரண்டு பேரும் மீரஜ் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர். அதன்பின் இரு சக்கர வாகனம் ஒன்றில் கிளம்பிச் சென்றனர். அந்த வாகன உரிமையாளர் சுதா மனோஜ் ஜோஷியிடம் விசாரித்தபோது,

திருமணம்

மாணவியுடன் சென்ற பெண் தன் மனைவி என்றும், உடனிருப்பது தன்னுடைய மாமா என்றும் தெரிவித்தார். கடைசியில் இருவரையும் பிடித்து விசாரித்ததில் அவர்களது பெயர் சுதா மனோஜ் ஜோஷி, லடப்பா என்று தெரியவந்தது. இருவரும் அந்தப் பெண்ணை அவுரங்காபாத்தைச் சேர்ந்த கண்பத் காம்ப்ளே (50 வயது) என்பவருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கின்றனர்.

இதையடுத்து கண்பத் அந்தப் பெண்ணை கோயில் ஒன்றில் வைத்து திருமணம் செய்துகொண்டார். கண்பத்திடம் விசாரித்தபோது, திருமணம் செய்வதற்குப் பெண் கிடைக்காததால், விலைக்கு வாங்கித் திருமணம் செய்ததாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மூவரும் போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.