மர்ம நபர் செய்த காரியம் - தாயாருக்காக ஆபாச புகைப்படங்களை அனுப்பிய இளம்பெண்!
இளம்பெண் ஒருவரின் ஆபாச புகைப்படங்களை அவரது உறவினர்களுக்கு மர்ம நபர் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர்
பெங்களூரு அம்ருதஹள்ளி பகுதியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவரின் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபரிடம் இருந்து புகைப்படங்கள் வந்தன. அந்த பெண்ணின் தாயின் புகைப்படங்களை மர்ம நபர் ஆபாசமாக சித்தரித்து அனுப்பியிருந்தார்.
பின்னர் அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை கேட்டுள்ளார். இல்லையெனில் தாயாரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த இளம்பெண் தாயாரின் மானத்தை காப்பாற்ற தனது நிர்வாண புகைப்படங்களை மர்மநபருக்கு அனுப்பியுள்ளார்.
போலீசார் விசாரணை
இதனையடுத்து அந்த இளம்பெண்ணின் புகைப்படங்களில் அவரது உறவினர்களுக்கு மர்ம நபர் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த மர்மநபர் இளம்பெண்ணுக்கு நன்கு தெரிந்த நபராக தான் இருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.