நிர்வாண வீடியோவை வைத்து பிளாக்மெயில் செய்யும் காதலன் - இளம்பெண் கதறல்!
காதலர் ஒருவர் இளம்பெண்ணின் நிர்வாண விடியோவை வைத்து மிரட்டும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல்
புதுச்சேரி மாவட்டம், உப்பளம் பகுதியில் உள்ள நேதாஜி நகரைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவர் கிளப் ஹவுஸ் என்கிற டேட்டிங் செயலி மூலம் சென்னையை சேர்ந்த திலிப் குமார் என்பராவிடம் பேசியுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து இருவரும் பழகி வந்தனர், பின்னர் அது காதலாக மாறியது.
இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்றவற்றில் பேச தொடங்கினர். சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது, இதனால் காதலிக்கவேண்டாம் நண்பர்களாகவே இருந்து கொள்ளலாம் என்று இளம்பெண் கூறியுள்ளார்.
மிரட்டல்
இந்நிலையில், அந்த இளம்பெண்ணிடம் நீ என்னிடம் பேசவில்லை என்றால் நான் செத்திடுவேன் என்று கூறியுள்ளார். பின்னர் பயந்துபோன பெண் அவரை தொடர்பு கொண்டபொழுது, "நான் உன்னிடம் இனிமேல் பேச வேண்டாம் அல்லது உன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றால் நீ நிர்வாணமாக வீடியோ காலில் வந்து பேசினால் நான் தொந்தரவு செய்ய மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
இதனை நம்பி அப்பெண் நிர்வாணமாக பேசியுள்ளார், அதனை வீடியோ ரெக்கார்டு செய்து கொண்டு என்னை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் விடியோவை அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பிவிவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மேலும், போலீசார் திலீப்பை தேடி வருகின்றனர்.