விட்டுச் சென்ற காதலி; 21 மணிநேரம் மண்டியிட்டு கதறிய காதலன் - கடைசியில் நடந்த சோகம்

China
By Sumathi Apr 05, 2023 07:32 AM GMT
Report

பிரிந்த காதலி தன்னிடம் மீண்டும் சேர வேண்டி காதலர் 21 மணி நேரம் மண்டியிட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

காதல் மோகம்

சீனா, டஜாவ் நகரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு பிரேக் அப் ஆகியுள்ளது.

விட்டுச் சென்ற காதலி; 21 மணிநேரம் மண்டியிட்டு கதறிய காதலன் - கடைசியில் நடந்த சோகம் | Man China Knel Down And Begged His Ex Girlfriend

இதனால் மன வருத்தத்தில் இருந்த இளைஞர் காதலியை சமாதானம் செய்ய முடிவெடுத்து நிறுவனத்திற்கு பூச்செண்டுடன் சென்றுள்ளார். தொடர்ந்து அலுவலகத்தின் வாசலில் மண்டியிட்டபடி காத்திருந்தார்.

கடைசியில் ஏமாற்றம்

ஆனால் அவரது காதலி இறங்கி வரவே இல்லை. இந்நிலையில், 21 மணிநேரம் அங்கேயே மண்டியிட்டபடி காத்திருந்தும் காதலி வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த இளைஞர் மிகவும் சோர்வடைந்து வேறு வழியின்றி தனது முயற்சியை கைவிட்டார்.

இதுதொடர்பான வீடியோ, போட்டோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.