நரமாமிசம் உண்ணும் குடும்பம், இளைஞனின் வெறிச்செயல் - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Attempted Murder United States of America Texas
By Vinothini May 29, 2023 06:08 PM GMT
Report

தன் குடும்பத்தினர் நரமாமிசம் சாப்பிடுவார்கள் என்று கூறி இளைஞன் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ்

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வசிப்பவர் 18 வயதான சீசர் ஒலால்டே என்னும் இளைஞர். இவர் தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

teen-murdered-his-cannibal-family

கடந்த செவ்வாயன்று ஒரு நபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.

அங்கிருந்த சீசர் உள்ளே பலர் இறந்து கிடப்பதாக கூறினார், இதனால் சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை கைதுசெய்தனர்.

தொடர்ந்து, அவரை விசாரணை செய்ததில் பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.

விசாரணை

இந்நிலையில், போலீசார் கூறுகையில், கொலை செய்த நபரின் பெற்றோரான ரூபன் ஒலால்டே, ஐடா கார்சியா, மூத்த சகோதரி லிஸ்பெட் ஒலால்டே மற்றும் இளைய சகோதரர் ஆலிவர் ஒலால்டே ஆகியோரின் உடல்கள் குளியலறையில் மீட்கப்பட்டன.

teen-murdered-his-cannibal-family

வீட்டின் பல்வேறு இடங்களில் இருந்து அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, பின்னர் கழிவறைக்கு இழுத்துச் சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், தனது குடும்பத்தினர் நரமாமிசம் உண்பவர்கள். அவர்கள் தன்னை சாப்பிட திட்டமிட்டதால் அவர்களை நான் கொன்றேன் என தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.