மனிதரை துடிக்க துடிக்க கொலை செய்து மூளை சாப்பிட்ட இளைஞர் - நெஞ்சை பதற வைத்த அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் மூளை சுறுசுறுப்புக்காக இருக்க வேண்டும் என்பதற்காக முதியவரை கொன்று மூளையை சாப்பிட்ட இளைஞரால் பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதாஹோ என்ற மாகாணத்தில் ஒருவர் மனித மாமிசம் சாப்பிட்டதற்கு கூறிய காரணம் போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதாஹோ மாகாணத்தில், ஒரு டிரக்கில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த ஒரு முதியவரின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த முதியவரின் உடல் முழுவதும் காயங்களுடன், ரத்தம் சொட்ட சொட்ட காணப்பட்டது. அந்த முதியவரின் உடலில் பல பாகங்கள் இல்லை.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இறந்தவர் பெயர் டேவிட் பிளாகெட் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஜேம்ஸ் டேவிட் ரசல் என்பவரின் வீட்டில் காவல்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது வீட்டில் ஒரு தட்டில் கல்லீரல், நுரையீரல் பாகங்கள், ரத்தம் நிறைந்த கண்ணாடி குவளை, கத்தி, ரத்தக்கறை படிந்த மைக்ரோவேவ் ஓவன் போன்றவை இருந்தது. இது தொடர்பாக ஜேம்சை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விசாரணையில் ஜேம்ஸ், என் மூளை சுறுசுறுப்பாக செயல்பட, டேவிட் பிளாகெட்டை கொலை செய்து அவரது மூளை உள்ளிட்ட பாகங்களை சாப்பிட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்தார். இதனைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து ஜேம்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜேம்சை மன நல மருத்துவ சோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதாஹோ மாகாணத்தில் நர மாமிசம் உண்போருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
ஒருவேளை இந்த வழக்கில் ஜேம்ஸ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், இதாஹோ மாகாணத்தில் முதன் முதலாக நரமாமிசம் சாப்பிட்டவருக்கான தண்டனையாக இருக்கும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.