அமெரிக்க அதிபரை கொலை செய்ய திட்டம் - இளைஞர் செய்த காரியத்தால் பரபரப்பு!
அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை கொல்வதற்கு திட்டமிட்டு ஒரு இளைஞர் செய்த காரியத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்து
அமெரிக்காவில், கடந்த திங்கள்கிழமை இரவு 10 மணியளவில், சாய் வர்ஷித் கந்துலா என்னும் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர், வெள்ளை மாளிகையிலுள்ள லாஃபாயெட் பூங்காவின் வடக்குப் பகுதியிலுள்ள நடைபாதையில் பாதுகாப்புத் தடைகள் மீது ட்ரக்கில் மோதியுள்ளார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை கிரிமினல் புகார் அளிக்கப்பட்டு, மேலும், வாஷிங்டன்னிலுள்ள நீதிமன்றத்தில் அந்த இளைஞருக்கு எதிராக ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த ஆவணப்படி, திங்கள்கிழமை இரவன்று செயின்ட் லூயிஸிலிருந்து டல்லஸ் சர்வதேச விமான நிலையம் வந்து இறங்கியதும், ட்ரக் ஒன்றை வாடகைக்கு எடுத்து இவ்வாறு வெள்ளை மாளிகையில் இடித்து விபத்து ஏற்படுத்தியுள்ளார்.
விசாரணை
இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கூறியதாவது, "வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்வதே தன்னுடைய இலக்கு" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் இதில் அதிபரைக் கொல்வேன் என்றும், அதற்குக் குறுக்கே யார் வந்தாலும் அவர்களையும் தாக்குவேன் என்றும் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து, இவர் ஹிட்லரின் பெருமையை பேசிக்கொண்டிருந்தார், இவர் ஆன்லைனில் நாஜிக்களின் சின்னம்கொண்ட கொடியை வாங்கியதாகவும் கூறினார்.
தொடர்ந்து, இவரின் நண்பர்களுடன் விசாரணை நடத்தியதில், அவர் மிகவும் அமைதியானவர் என்று கூறியுள்ளனர்.
மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என ஆராய்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.