முதன் முறையாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ள பிரதமர் மோடி

pmmodi jobiden firstmeeting
By Irumporai Sep 04, 2021 08:09 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இம்மாத இறுதியில் அமெரிக்கா பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த பிரதமர் மோடி, கொரோனா இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் அமெரிக்கா பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக ஜோபைடன் முதல் முறையாக பதவியேற்ற பின் பிரதமர் மோடி அமெரிக்கா பயணிப்பது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே இணைய வழியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆகியோர் பங்கேற்றுள்ள நிலையில் முதல் முறையாக நேரடியாக சந்தித்து பேச உள்ளனர்.

ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக உள்ள இந்தியா ஆகஸ்ட் மாத்துக்கான தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு 'ஹவுடி மோடி' என்ற கலாசார நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடதக்கது.

அமெரிக்க பயணம் உறுதியாகும் பட்சத்தில் செப்.,23, 24 தேதிகளில் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.