ஒரு மணி நேரம் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா - மார்க் இழந்தது எத்தனை கோடிகள் தெரியுமா?

Facebook Instagram World Mark Zuckerberg Technology
By Jiyath Mar 06, 2024 10:51 AM GMT
Report

பேஸ்புக், இன்ஸ்டா தளங்கள் நேற்று முடங்கியதால் அமெரிக்க பங்கு சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு குறைந்தது. 

முடங்கிய தளங்கள்  

உலகம் முழுவதும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த 3 நிறுவனங்களுமே மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

ஒரு மணி நேரம் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா - மார்க் இழந்தது எத்தனை கோடிகள் தெரியுமா? | Technical Outage Zuckerberg Loses 3 Billion

இவற்றை மார்க் ஜூக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார். இதனிடையே நேற்று உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வலைத்தளங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் முடங்கியது.

கட்டண பாக்கி - Google Playstore-லிருந்து நீக்கப்பட்ட பிரபலமான 10 இந்திய App-கள்!

கட்டண பாக்கி - Google Playstore-லிருந்து நீக்கப்பட்ட பிரபலமான 10 இந்திய App-கள்!

சந்தை மதிப்பு இழப்பு 

இதனால் அவற்றை பயன்படுத்தும் பயனர்கள் எந்த சேவைகளையும் பெற முடியாமல் தவித்தனர். இதனையடுத்து தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.

ஒரு மணி நேரம் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா - மார்க் இழந்தது எத்தனை கோடிகள் தெரியுமா? | Technical Outage Zuckerberg Loses 3 Billion

இந்நிலையில் அமெரிக்க பங்கு சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு இன்று 1.6 சதவீதம் குறைந்தது. இதனால் மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜூக்கர்பர்க் $3 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.25,000 கோடி) சந்தை மதிப்பை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.