இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? பட்டியலில் உள்ள அந்த 2 பெயர்கள்!

India Indian Cricket Team
By Swetha Jul 02, 2024 07:18 AM GMT
Report

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

பயிற்சியாளர் யார்?

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பொறுப்பு கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பது இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் தொடருக்க முன்னதாக வெளியாகும் என்று

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? பட்டியலில் உள்ள அந்த 2 பெயர்கள்! | Team India Next Head Coach Announcement Soon

பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்திருந்தார். இருப்பினும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போது அடுத்த பயிற்சியாளர் யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அடுத்த டி20 கேப்டன் - தலைமை பயிற்சியாளர் யார்..? ஜெய் ஷா முக்கிய தகவல்!

அடுத்த டி20 கேப்டன் - தலைமை பயிற்சியாளர் யார்..? ஜெய் ஷா முக்கிய தகவல்!

அந்த 2 பெயர்கள்

இந்த சூழலில், கவுதம் காம்பீர்தான் அணியின் அடுத்த பயிற்சியாளராக வருவார் என்று பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருகின்றனர். அதேபோல, இந்திய மகளிர் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமனும் இந்த போட்டியில் உள்ளார்.

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? பட்டியலில் உள்ள அந்த 2 பெயர்கள்! | Team India Next Head Coach Announcement Soon

அவரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேட்டி அளித்த பிசிசிஐ செயலர் ஜெய்ஷா, இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் தொடருக்கு முன்னதாக அதாவது ஜூலை 27 ஆம் தேதிக்கு முன்னதாக பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.