3 வயது குழந்தையின் கைகளை பின்னால் கட்டிப்போட்டு ஆசிரியர்கள் செய்த காரியம் - கொடுமை!
பேசமுடியாத 3 வயது குழந்தையின் கைகளை கட்டிப்போட்டு கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளி
சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் அஜிஸ் முல்லாக் தெருவைச் சேர்ந்தவர் சையது நவாஸ், 27 வயதான இவர் தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 3 வயதில் பேச்சுத்திணறணற்ற ஒரு மகன் உள்ளார். இவருக்கு பேச்சுத்திறன் குறைபாடு உள்ளதால் அதனை சரி செய்வதற்காக, எழும்பூர் வீராச்சாமி சாலையில் உள்ள தனியார் பயிற்சி பள்ளியில் சேர்ந்துள்ளார்.
அங்கு 3 வயது குழந்தைக்கு தினமும் ஒரு மணி நேரம் என 6 மாத பயிற்சி வகுப்புகள் எடுத்து வந்தனர். நேற்றுமுன்தினம் வழக்கம்போல் பேச்சுப்பயிற்சி வகுப்பிற்கு சென்றார், அப்பொழுது அவரது தாத்தா அம்ஜத் கான் அழைத்து வர சென்றார்.
கொடுமை
இந்நிலையில், அங்கு பள்ளியில் குழந்தையின் இரு கைகளை பின்பக்கம் கட்டி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், குழந்தை வழியால் அழுதுகொண்டே இருந்துள்ளது. அங்கிருந்த வகுப்பு ஆசிரியர் ஞானசேகரிடம் இது குறித்து கேட்டபோது அவர் இப்படி தான் செய்வோம் என தெனாவட்டாக பதில் அளித்துள்ளார். உடனே வீட்டிற்கு சென்று அவர் தனது மகன் சையது நவாஸிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.
பின்னர், எழும்பூர் காவல் நிலையத்தில் சென்று தனியார் பயிற்சி பள்ளி உரிமையாளரான வின்சென்ட் (44) , வகுப்பு ஆசிரியரும் பச்சையப்பன் கல்லூரி மாணவனுமான ஞானசேகர் மீது புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில் ஞானசேகர் பேச்சுப்பயிற்சியில் கைகளை பின்னால் கட்டி போடுவதும் ஒரு வகையான பயிற்சி என கூறியுள்ளார். மேலும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.