மாணவர்களிடம் ஆபாச சாட்டிங் செய்த டீச்சர்ஸ்; சுற்றுலாவில் தகாத செயல் - அதிர்ச்சி சம்பவம்!
பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர்களே தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத செயல்
அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள விஸ்கான்சினில் ஒரு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அலெக்ஸியா சல்டாரிஸ் மற்றும் ஜெனிஃபர் லார்சன் ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் இருவரும் தங்களிடம் படிக்கும் மாணவர்கள் சிலருடன் ஆபாச சாட்டிங் செய்து வந்துள்ளனர். அந்த மாணவர்களுக்கு ஆபாச புகைப்படங்களையும் அனுப்பியுள்ளனர். மேலும், மாணவர்களை பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
தலைமறைவு
அதேபோல் பள்ளியிலிருந்து சுற்றுலா சென்றபோது ஒரு மாணவருக்கு வற்புறுத்தி முத்தம் கொடுத்துள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து வெளியில் தெரிய வந்ததையடுத்து, 2 ஆசிரியர்களும் தங்களது பணியை ராஜினாமா செய்து தலைமறைவாகியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து ஜேன்ஸ்வில்லி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர்களே தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.