வகுப்பறையில் "ஜெய் ஸ்ரீ ராம்" எழுதிய மாணவன்...ஆசிரியர்களின் செயலால் வெடித்த போராட்டம்
ஜம்மு காஷ்மீரில் வகுப்பறையின் கரும்பலகையில் ஜெய் ஸ்ரீ ராம் என எழுதிய மாணவனை ஆசிரியர் அடித்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .
பள்ளியில் பரபரப்பு
ஜம்மு காஷ்மீர் கதுவா பானியிலுள்ள மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன், ஒருவர் வகுப்பறை கரும்பலகையில் 'ஜெய் ஸ்ரீராம்' என்று எழுதி இருக்கிறார். இதைப் கண்ட பள்ளியின் வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் இருவரும் கரும் பலகையில் 'ஜெய் ஸ்ரீராம்' எழுதிய மாணவனை கடுமையாக தாக்கியுள்னர்.
ஆசிரியர்களின் தாக்குதலில் காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவன் தாக்கிய சம்பவம் அப்பள்ளி மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்த அவர்கள் ஆசிரியர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்
இந்நிலையில், சம்பவம் அறிந்து பள்ளிக்கு வருகை தந்த காவல் துறையினர் கிடைத்த புகார்களின் பேரில் இரண்டு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 342 (தவறான சிறைவாசம்), 504 (அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்), 506 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் சிறார் பிரிவு 75 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல் துறையினர் தெரிவிக்கும் போது, "பள்ளியில் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டு, விரைவில் உரிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினர்.