பள்ளி தலைமை ஆசிரியையை செருப்பால் அடித்து துவைத்த ஆசிரியர்கள் - வைரலாகும் வீடியோ!

Bihar
By Vinothini May 26, 2023 10:46 AM GMT
Report

பள்ளியின் தலைமை ஆசிரியையை சக ஆசிரியர் செருப்பால் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பாட்னா

பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள ஒரு பஞ்சாயத்து பள்ளிகூடத்தில் அனிதா குமாரி என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அதே பள்ளியில் காந்திகுமாரி என்பவர் தலைமை ஆசிரராக உள்ளார்.

teachers-beaten-head-master-brutally

இதில் அனிதா வகுப்பறையில் பாடம் எடுத்து கொண்டிருக்கும்போது, அங்கு வந்த தலைமை ஆசிரியர் அங்கு உள்ள ஜன்னலை மூடுமாறு கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது, பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் தாக்கி கொண்டனர்.

தாக்குதல்

இந்நிலையில், இருவரும் சரமாரியாக அடித்து கொண்டனர், இந்த சண்டை முதலில் வகுப்பறையில் தொடங்கியது.

பின்னர், அது முற்றி மைதானம் வரை சென்றுள்ளது. அப்பொழுது அனிதாவுடன் மற்றொரு ஆசிரியையும் சேர்ந்து அந்த தலைமை ஆசிரியரை தாக்க தொடங்கினர். அதில் அவரகள் கையில் கம்பு மற்றும் காலணிகளை எடுத்து தாக்கியுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மேலும் இது குறித்து, வட்டார கல்வி அலுவலர் சுரேஷ், " அவர்கள் இருவரும் முன்விரோதம் காரணமாக தாக்கி கொண்டனர். இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது, அறிக்கை வந்ததும் விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.