முதியவரை தாக்கிய பெண் போலீசார் : வெளியான அதிர்ச்சி வீடியோ

Viral Video Crime
By Irumporai Jan 21, 2023 08:53 AM GMT
Report

பீகாரில் மாநிலத்தில் முதியவரை தாக்கிய இரண்டு பெண் காவல்துறை அதிகாரிகளின் வீடியோ அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

 முதியவர் மீது தாக்குதல்

பீகார் மாநிலம் கைமூர் மாவட்ட பகுதியில் உள்ள பகுதியில் முதியவரை தெருவில் வைத்து இரண்டு பெண்காவல்துறை அதிகாரிகள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த நிலையில் தக்கப்பட்ட பாண்டேஜி என்ற முதியவர் கைமூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

முதியவரை தாக்கிய பெண் போலீசார் : வெளியான அதிர்ச்சி வீடியோ | Police Woman Attacked Old Man In Bihar

வைரலாகும் வீடியோ

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையாக இருந்தாலும், காவல்துறையினரின் தாக்குதலைத் தடுக்கவோ முதியவருக்கு உதவவோ யாரும் முன்வரவில்லை. இந்த சம்பவம் குறித்து பீகார் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.