அடிச்சது..அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டர்! 24 ஆண்டுகளுக்குப் பின் பிச்சைகாரருக்கு வந்த ஆசிரியர் பணி?
ஆந்திராவில் பிச்சைக்காரருக்கு 24ஆண்டுகளுக்கு பிறகு வந்த ஆசிரியர் அரசுப்பணி கிடைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாசகம்
ஆந்திரா மாநிலம் பாத்தப்பட்டனம் அருகே உள்ள பெத்தசேதி கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதான கேதாஸ்வர ராவ். சிறுவயதில் பெற்றோரை இழந்த இவர், உடன்பிறந்தவர்களால் வெறுக்கப்பட்டு வேலையின்றி யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையே, 1994 ல் ஆசிரியர் அரசுப்பணிக்கு தேர்வெழுதி தேர்ச்சிபெறாத கேதாஸ்வர ராவ், 1996,1998 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுப் பதிவு செய்தபோதும் பணி கிடைக்காமல் போனது.
பணி ஆணை
அதன் பின்னர், உணவு,உடையின்றி ஒருவேளை உணவிற்காக ஏங்கி வந்த இவருக்கு 26 ஆண்டுகள் கழித்து தற்போது பணி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஓய்வுபெறும் வயதில் பணி ஆணை வந்திருக்கும் செய்தியைக் கிராம இளைஞர்கள் வாயிலாக தெரிந்துகொண்ட கேதாஸ்வர ராவ், சான்றிதழ்கள் வைத்திருப்பதால் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆர்வமுடன் இருப்பதாக இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அடடே... செல்ல பிராணிகளுக்கு டேட்டிங் ஆப்-ஆ! மாஸ் காட்டும் காவல்துறை