மருமகளே.. மகனிடம் பேசச்சொல்லி மாணவியை வற்புறுத்திய ஆசிரியை - அதிர்ச்சி சம்பவம்!

Tamil nadu Child Abuse Crime
By Sumathi Sep 29, 2022 08:27 AM GMT
Report

 மாணவியை மருமகளாக அழைத்து, மகனிடம் பேசச் சொல்லி ஆசிரியை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி ஆசிரியை

திருப்பூர், மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு கணித பாட ஆசிரியராக பணியாற்றி வருபவர் சாந்தி பிரியா. இவர் வகுப்பில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை மருமகள் என அழைத்து வந்துள்ளார்.

மருமகளே.. மகனிடம் பேசச்சொல்லி மாணவியை வற்புறுத்திய ஆசிரியை - அதிர்ச்சி சம்பவம்! | Teacher Treated Student Forced To Talk To Son

மேலும் அந்த மணவியிடம் அவரிடம் புகைப்படம் கேட்டும் தனது மகனிடம் அலைபேசியில் பேசுமாறும் வற்புறுத்தி உள்ளார். அத்துடன் மாணவிகளை, வகுப்பறையில் அவமானப்படுத்துவதும். பாடத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு அவமதிப்பதும்.

மாணவிகளுக்கு டார்ச்சர்

இரவு நேரங்களில் அலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்வதும், அலைபேசியை எடுக்க மறுத்தவர்களை மதிப்பெண்களில் கை வைப்பேன் என மிரட்டுவதும், மாணவர்களை மிகவும் தரக்குறைவாக நடத்துவது மற்றும் தனது கணவரை இரவில் தூங்கும்போது நினைத்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி,

தரக்குறைவான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும்,

புகார்

பள்ளியில் பணி செய்யாமல் காலம் தாழ்த்துவதாகவும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பள்ளிக்கு நேரடி ஆய்வு மேற்கொண்டு, காவல்துறை உதவியுடன் விசாரணை நடத்தி,

மாணவர்களிடம் கடிதம் மூலமாக ஒப்புதல் பெறப்பட்டது. அதனையடுத்து ஆசிரியை சாந்தி பிரியா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.